நெல் உற்பத்தியில் வீழ்ச்சி; 9 இலட்சம் பேரின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறி

நெல் உற்பத்தியில் வீழ்ச்சி; 9 இலட்சம் பேரின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறி Featured

/ Tuesday, 10 October 2017 09:25

நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக உள்நாட்டில் 9 இலட்சம் பேரின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் கவலை வெளியிடப்பட்டிருந்தது.


இலங்கையின் உள்நாட்டு சந்தையில் நெல்லின் இருப்பு குறைந்துள்ளமையினால் அதனை நிவர்த்தி செய்ய மேலதிக நெல் கொள்வனவ அவசியம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மேலதிகமாக தற்போது இந்தியாவிடமிருந்தும், அரசி கொள்வனைவை மேற்கொள்ளும் தேவை இலங்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சமாளிப்பதற்கு, ஆசிய நாடுகளிலிருந்து அவசரமாக அரசியை இறக்குமதி செய்ய அரச தீர்மானித்திருந்தது. இதனடிப்படையில் இந்தியாவில் இருந்து 72 ஆயிரம் மெட்ரிக் டொன் அரசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி முதற்கட்டமாக 12 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை ஏற்றிவந்த கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கைதொழில் மற்றும் வர்த்க அமைச்சு கூறியுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும், மொத்த வியாபார கூட்டுறவு சங்கம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரசியை பெற்றுக்கொள்வதோடு, இதனை சதொச ஊடாக விற்பனை செய்யவுள்ளது.

மொத்த விற்பனையில் குறித்த அரசியினை 72 ரூபாவாக விற்பனை செய்யவும், இதேவேளை சில்லறையாக 74 ரூபாயிற்கு விற்பனை செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டிருந்த வறட்சி காரணமாக நெல் உற்பத்தியில் 40 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதீப்பீடு செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Please publish modules in offcanvas position.