பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயமாகாது; எரிபொருள் விலையேறாது

பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயமாகாது; எரிபொருள் விலையேறாது Featured

/ Tuesday, 10 October 2017 05:51

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று தினேஸ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நிறுவனம் எங்கள் நாட்டினுடைய அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செலுத்தும் நிறுவனம். அத்தோடு தேசிய சக்தி வளங்களை பாதுகாக்கும் முக்கிய பொறுப்புவாய்ந்த அமைப்பாக இந்நிறுவனம் காணப்படுகின்றது.

நான் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் முழுநாட்டு மக்களுக்கும் பொறுப்பு காணப்படுகின்றது இந்நிறுவனத்தை பலமிக்க நிறுவனமாக மற்றுவது தொடர்பாக. நான் இது தொடர்பாக உறுதியுடன் உள்ளேன்.

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது நாட்டில் ஜனவரி 22, 2015 முதல் எரிபொருள் விலை பெரிதும் குறைக்கப்பட்டு அரசாங்கத்தின் இலக்கை அடைய முடிந்தது

விலைக்குறைப்பினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெறும் நட்டம் ஏற்பட்டதையும் நான் இங்கு தெரிவிக்கவேண்டும். ஆனாலும் சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை மற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please publish modules in offcanvas position.