யாழில் குடும்பஸ்தரை
காணவில்லை என முறைப்பாடு

குடத்தனை வடக்கைச் சேர்ந்த குடும் பஸ்தர் ஒருவரை கடந்த 21ம் திகதியில் இருந்து காணவில்லை என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட் டுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த வரதராஜா கலைக்கண்ணன் (வயது28) என்பவர் கடந்த 21 ஆம் திகதி மீன் வியாபாரத்துக்குச் சென்றவர் என்றும் நேற்றுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.