ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை
ஒத்திவைப்பதற்குத் தீர்மானம்

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை இரு தினங்களால் ஒத்திவைப்பதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பள அதிகரிப்பு கோரி ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாடு என்பனவற்றின் காரணமாகவே உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
பரீட்சை ஆரம்பமாகும் புதிய திகதி பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர், அது குறித்து சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். (க)