|
வவுனியா,அரசடிக்குளம் காந்திநகர் வீதியில் நேற்றுப் பிற்பகல் 1.35 மணியளவில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு இராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்த இராணுவச் சிப்பாய் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் சிறு குழு ஒன்று மறைந்திருந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்றும் அதற்குத் தாங்கள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் அவர்களுக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் படைத்தரப்பினர் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டனர் என்றும் கூறப்பட்டது. (த 10) |