குஞ்சுப்பரந்தனில் வான் தாக்குதல்
குடும்பஸ்தர் காயம்; வயல்கள் நாசம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பரந்தன் பூநகரி வீதியில் குஞ்சுப்பரந்தன் சந்திப் பகுதியில் விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்கள் நேற்றுக்காலை 10.05 மணியளவில் தாக்குதல் நடத்தின. அதில் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்தார். விவசாய நிலங்களும் சேதமடைந்தன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே இடத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை கமல் (வயது 24) என்பவரே காயமடைந்தவராவார்.
இதேவேளை, பரந்தன் பகுதியிலிருந்து தென்மேற்கே 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் விநியோக மையங்களை இலக்கு வைத்தே நேற்றுக்காலை 10.15 மணிக்கும் பிற்பகல் 1.30 மணியளவிலும் விமானப்படையினரின் ஜெற் விமானங்கள் தாக்குதல்களை நடத்தின என்று விமானப்படையினர் தெரிவித்தனர்.(த 10)