|
அநுராதபுரம் கலன் பிந்துனுவௌ வில் உள்ள ஜே.வி.பியின் கட்சி அலுவலகம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்திற்கான ஜே.வி.பி. வேட்பாளர் எஸ். திலகசிறியின் வீட்டில் இயங்கிய அலுவலகமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த கட்சிக் கொடி உட்படப் பல பொருட்களுக்கும் அலுவலகத்திற்கும் தீ வைத்தனர்என திலகசிறி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுரகுமார திஸநாயக்க மற்றும் ரணவீர பத்திரன ஆகியோரால் பயன்படுத்தப்படும் அநுராதபுர மாவட்ட அலுவலகமொன்றும் அரச ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
வெள்ளை வானில் வந்தவர்களால் கட்சியின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.(த)
|