|
கீதாஞ்ஜன குணவர்தன பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட எம். பி. பிரியங்கர ஜயரட்ண புதிய பிரதி சபாநாயகராக ஏகமனதாக நேற்று நாடாளுமன்றில் தெரிவு செய்யப்பட்டார்.
இவரின் பெயரை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க பிரேரித்தார்.சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா அதை ஆமோதித்தார்.எதிர்க்கட்சிகளின் சார்பிலும் எவரையாவது பிரேரிக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டபோதும் எவரது பெயரும் பிரேரிக்கப்படவில்லை.
இதனால், வாக்கெடுப்பின்றி பிரியங்கர ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார் என சபாநாயகர் அறிவித்தார்.
புதிய சபாநாயகருக்கு அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர், அவர் பக்கச்சார்பின்றி தமது கடமையைமுன்கொண்டு செல்வார் என்று தாம் நம்புகிறார் எனச் சபாநாயகர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பிரியங்கர நேற்றே அவரது கடமையை ஆற்றத் தொடங்கினார்.
கிளைமோர் தாக்குதலால் கொல்லப்பட்ட புத்தளம் மாவட்ட எம்.பியும் அமைச்சருமான த. மு. தஸாநாயக்கவின் எம்.பி. பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டவரே இந்தப் பிரியங்கர ஜயரட்ன என்பது குறிப்பிடத்தக்கது. (த7)
|