கூட்டமைப்பு எம்.பிக்கள்
இருவருக்கு விடுமுறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஜெயானந்தமூர்த்தி மற்றும் வன்னி மாவட்ட எம்.பி. கனகரட்ணம் ஆகியோர் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க நாடாளுமன்றத்தால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கனகரட்ணம் எம்.பிக்கான விடுமுறையைக் கோரும் பிரேரணையை கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட எம்.பி. துரை ரட்ணசிங்கமும் ஜெயானந்தமூர்த்திக்கான விடுமுறையைக் கோரும் பிரேரணையை மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கனகசபையும் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தனர்.
சபையின் இணக்கப்பாட்டோடு இரு எம்.பிக்களுக்கும் நாடாளுமன்றால் விடுமுறை வழங்கப்பட்டது. (த 07)