திருகோணமலை சிவபுரிப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 வயதுடைய வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.
வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அவரது கடைக்குச் சென்றுகொண்டிருந்த வழியிலேயே இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. (த10)