15-05-2008 Thursday  
 

எதிரியைப் பிரிக்கும் தந்திரம்

     

புலிகளுடனான போரில் இலங்கை தோற்றால்
பயங்கரவாதத்திடம் உலகம் தோற்றதாகும்
ஜனாதிபதி மஹிந்த புதிய விளக்கம்
ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையில்

 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அரசு தோற்குமானால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்;ஜனநாயகம் பலியானதாகிவிடும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றார். லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
     
பிள்ளையான் குழுவினரை நிராயுதபாணிகளாக்குமாறு
தேர்தலுக்கு முன் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தாராம்
ஆனால் அதிகாரிகள் அதனை உதாசீனப்படுத்தி
விட்டனர் என்கிறது ஐ.தே.கட்சி
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற போட்டியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிள்ளையானும் மற்றும் ஹிஸ்புல்லாவும் இழுபறிப்பட, இந்த விவகாரத்தில் சர்வதேசத் தரப்புகளை இழுத்துவிடவும் தீவிர முயற்சிகளை சிலர் மேற்கொண்டிருக்கின்றனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     
கருணா இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால்
அவர் இங்கு சட்டப்படி கையாளப்படுவாராம்
அரசு நேற்றுத் தெரிவிப்பு
 
பிரித்தானிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கருணா இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவரைக் கைதுசெய்வதா, இல்லையா என்பது இலங்கைச் சட்டத்தின்படி முடிவெடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுக் கூறினார்.
     

கிழக்கு மாகாணத் தேர்தல் மோசடிகளை ஆட்சேபித்து
நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ஐ.தே.க. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாக ஏற்பாடு

 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பாரிய மோசடிகள் இடம்பெற்றன என்று தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதனை ஆட்சேபித்து நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு மருதானையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
     

தனிநாட்டுக் கோரிக்கையைக் கிழக்கு மக்கள்
நிராகரித்துவிட்டனர் என்பதே தேர்தலின் முடிவு
பெறுபேறுகளை இப்படி வியாக்கியானப்படுத்துகிறது அரசு

 

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம் கிழக்கு மக்கள் பிரபாகரனின் தனிநாட்டுக் கொள்கையை நிராகரித்துவிட்டனர் என்று அரசு நேற்றுத் தெரிவித்தது. இத் தேர்தல் முடிவுகள் கிழக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டப் போராடும் சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும் அரசு கூறியுள்ளது.

     

பூஸாவில் தமிழ்க் கைதிகள் மீது கெடுபிடி:
நேற்று மேல்நீதிமன்றத்தில் விவரிப்பு!

 
கொழும்பு, வெலிக்கடை நியூ மகஸின் சிறைச்சாலையிலிருந்து கடந்த 10 ஆம் திகதி மாலை திடீரென பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகளும் அங்கு நிர்வாணமாக்கப்பட்டு, தூஷிக்கப்பட்டனர் என்றும், அவர்களில் சிலர் தாக்கப்பட்டனர் என்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விவரிக்கப்பட்டது.
     

விமல் வீரவன்ஸவின் கட்சி
நேற்று அங்குரார்ப்பணம்

 
ஜே.வி.பியின் அதிருப்திக் குழுவினரால் புதிதாக நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணி இரு பிரதான தேசியக் கட்சிகளுக்கும் நிகராகச் செயற்படவேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொண்டுள்ளது என விமல் விரவன்ஸ தெரிவித்துள்ளார்.
     

தனியான அலைவரிசைகள் மூலம்
தேர்தல் பிரசாரம் செய்தது அரசு!
இது சட்டவிரோதம் என்கிறது மு.கா.

 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையான் குழு தமது பிரசார நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கு வசதியாக அக்குழுவிற்கு "உதயம் தொலைக்காட்சி' என்ற பெயரில் கிழக்கில் தனியான தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
     

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில்
இலங்கைப் பிரதிநிதிகளிடம் கேள்விக்கணை
மேற்கு உலக நாடுகள் முன்வைப்பு

 
மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பில் இலங்கை அரசின் உறுதிப்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் உலக நாடுகள் பல கேள்விகள் எழுப்பியுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
     

தமிழ்க் கூட்டமைப்பின் வேண்டுகோளை
கிழக்கிலங்கை மக்கள் நிறைவேற்றினர்
அரியநேத்திரன் எம்.பி. கூறுகிறார்

 
"கிழக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
     

மகேஸ்வரியின் இறுதிக் கிரியை
இன்று கனத்தை மயானத்தில்

 
படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் டக்ளஸின் அமைச்சுசார் ஆலோசகர் செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை கொழும்பு, பொறளையில் அமைந்துள்ள கனத்தை மயானத்தில் இடம்பெறவிருக்கின்றது என்று ஈ.பி.டி.பி. கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
     

செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின்
கொலையைக் கண்டிக்கிறது ஈ.பி.டி.பி

 
""மனித நேய முயற்சிகளில் முழுமையாகத் தம்மை அர்ப்பணித்து பணிபுரிந்த மகேஸ்வரி வேலாயுதத்தை புலிகள் படுகொலை செய்துள்ளனர். அவர்களது இத்தகைய நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்''
     

கிளிநொச்சியில்
விமானத் தாக்குதல்

 
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, முழங்காவிலுக்குத் தெற்கே நான்கு கிலோமீற்றர் தொலைபில் உள்ள கோலன் வில்லுப் பகுதியில் விமானப்படையினரின் ஜெற் விமானங்கள் நேற்றுக்காலை 7.15 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
     

மகேஸ்வரி படுகொலைக்கு
புலிகள் மீது சங்கரி கண்டனம்

 
ஈ.பி.டி.பியைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனத் தெரிவித்து அதனை வன்மையாக கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியிருப்பவை வருமாறு:
     

திருமலை துறைமுகக் கப்பல் தாக்குதல்
பொருளாதாரத்தின் மீது வீழ்ந்த ஒரு அடி!
"த பொட்டம் லைன்' ஏடு ஆய்வு

 
"திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த விநியோகக் கப்பல் மூழ்கடிப்பட்டமையானது இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.''
இவ்வாறு ""த பொட்டம் லைன்'' ஆங்கில வார ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.
     

கிளைமோர் தாக்குதலில்
மன்னாரில் ஒருவர் காயம்

 
மன்னார் கூராயில் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தியதாகக் கூறப்படும் கிளைமோர் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். கூராய்ப் பகுதியில் கடந்த புதன்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
     

முதலாம் திகதி முதல் நேற்றுவரை
புலிகள் தரப்பில் 368 பேர் மரணம்
இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்

 
இம்மாதம் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி (நேற்று)வரை இடம்பெற்ற படையினருக்கும், புலிகளுக்குமிடையிலான மோதல்களின்போது புலிகள் தரப்பில் 368 பேர் கொல்லப்பட்டும் 438 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
     

Tamil Font
Unicode

 
 
Google